/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபயணம்; மாணவர்கள் பங்கேற்பு
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபயணம்; மாணவர்கள் பங்கேற்பு
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபயணம்; மாணவர்கள் பங்கேற்பு
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபயணம்; மாணவர்கள் பங்கேற்பு
ADDED : ஜன 24, 2026 06:42 AM

புதுச்சேரி: சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி, நகர பகுதியில் விழிப்புணர்வு நடைபயணம் நடந்தது.
புதுச்சேரி போக்குவரத்து துறை சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதம் கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி, விழிப்புணர்வு நடைபயணம் நேற்று நடந்தது.
காந்தி சிலை எதிரே விழிப்புணர்வு நடைபயணத்தை துணை போக்குவரத்து ஆணையர் வினயராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தொடர்ந்து காந்தி சிலை எதிரே துவங்கி விழிப்புணர்வு நடைபயணம் செஞ்சி சாலை, மிஷன் வீதி, பாரதி பூங்காவில் நிறைவடைந்தது.
நடை பயணத்தில் தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிய வேண்டும். வேக கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். சிக்னல்களை மதித்து கடை பிடிக்க வேண்டும். குடிபோதையில் வாகனம் ஓட்ட கூடாது.
வாகனம் ஓட்டும்போது மொபைல்போன் பயன்படுத்த கூடாது என்று நகர பகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சிறப்பு அழைப்பாளர்கள் செயற்பொறியாளர் சீதாராம ராஜூ, ஆர்.டி.ஓ., பிரபாகர ராவ் ஆகியோர் போக்குவரத்து விதிமுறைகளை குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர்.
இந்த நடைபயணத்தில் 30 கல்லுாரிகளை சேர்ந்த 400 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

