/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலை போக்குவரத்து விழிப்புணர்வு
/
சாலை போக்குவரத்து விழிப்புணர்வு
ADDED : ஜன 30, 2026 05:31 AM

பாகூர்: கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீஸ் நிலையத்தில், சாலை போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இன்ஸ்பெக்டர் தன்வந்திரி வரவேற்றார். சீனியர் எஸ்.பி., நித்யா ராதாக்கிருஷ்ணன் நிகழ்ச்சியை துவக்கி வைத்து, ஹெல்மெட் அணிந்து சென்ற வாகன ஓட்டிகளுக்கு, 'சாலை நல்ல பயனாளர்' என்ற சான்றிதழ் வழங்கி, பாராட்டினார். தொடர்ந்து, கண் பரிசோதனை முகாம், சாலை பாதுகாப்பு வீதி நாடகம், விபத்தின் போது காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர் ஓஜேஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு பஸ் மற்றும் ஆட்டோ டிரைவர்களுக்கு கண் பரிசோதனை செய்தனர். சாலை விதிகளை மீறுவோருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், எமன், சித்திரகுப்தன் வேடமணிந்து சாலை விதிகளை பின்பற்றுவதன் அவசியம் குறித்து, வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
முகாமில், சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், அரவிந்தர் கண் மருத்துவமனை மக்கள் தொடர்பு அதிகாரி காவேரி, முகாம் பொறுப்பார் திருவேங்கடம், அலர்ட் பவுண்டேஷன் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

