/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வில்லியனுாரில் சாலை பணி துவக்கம்
/
வில்லியனுாரில் சாலை பணி துவக்கம்
ADDED : ஜூலை 16, 2025 01:49 AM

வில்லியனுார் : வில்லியனுார் பத்மினி நகரில் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியை எதிர்க்கட்சித் தலைவர் சிவா துவக்கி வைத்தார்.
வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், பத்மினி நகரில் ரூ.21.40 லட்சம் மதிப்பில் சிமென்ட் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.
எதிர்க்கட்சித் தலைவர் சிவா பங்கேற்று பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், இளநிலைப் பொறியாளர் சத்தியநாராயணா, பத்மினி நகர் முக்கியஸ்தர்கள் சத்தியமூர்த்தி, விஸ்வநாதன், நந்தகுமார், சுதர்சன், திருக்குமரேசன், தட்சிணாமூர்த்தி, சுந்தர்ராஜன், உதயசங்கர், ஆறுமுகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.