
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: மொளப்பாக்கம் கிராமத்தில் தார் சாலைகள் அமைக்கும் பணியினை துணை சபாநாயகர் ராஜவேலு துவக்கி வைத்தார்.
நெட்டப்பாக்கம் தொகுதி மொளப்பாக்கம் கிராமத்தில், பொதுப்பணித்துறை கட்டடம் மற்றும் சாலைகள் தெற்கு கோட்டா உட்கோட்டம் 5மூலம், ரூ. 48 லட்சத்து 91 ஆயிரம் மதிப்பில் உட்புற தார்சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காண பணியினை துணை சபாநாயகர் ராஜவேலு பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறைதலைமை பொறியாளர் வீரசெல்வம், செயற்பொறியாளர் சந்திரகுமார், உதவி பொறியாளர் பன்னீர், இளநிலை பொறியாளர் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.