
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர் : கரிக்கலாம்பாக்கத்தில் ரூ.12.5 லட்சம் செலவில் தார் சாலை அமைக்கும் பணியை, லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் கரிக்கலாம்பாக்கத்தில் வேதவள்ளி நகரில் ரூ.8.50 லட்சம் செலவிலும், பெரியார் நகரில் ரூ.4 லட்சம் செலவிலும் தார்சாலை அமைக்கப்பட உள்ளது.
இப்பணிகளுக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து, பணிகளை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், நெட்டப்பாக்கம் கொம்யூன் உதவி பொறியாளர் ராமலிங்கேஸ்வரராவ் மற்றும் அதிகாரிகள், என்.ஆர்.காங்., பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.