/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நாவற்குளத்தில் சாலை பணி: முதல்வர் துவக்கி வைப்பு
/
நாவற்குளத்தில் சாலை பணி: முதல்வர் துவக்கி வைப்பு
ADDED : ஜன 21, 2025 06:37 AM

புதுச்சேரி: நாவற்குளம் வார்டு பகுதிகளில் புதிதாக சாலைகள் அமைக்கும் பணியை முதல்வர் ரங்கசாமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
காலாப்பட்டு தொகுதி நாவற்குளம் பகுதி முழுதும் பொதுப்பணித் துறை மூலம் ரூ. 10.67 கோடி மதிப்பில் சாலைகள் அமைப்பதற்கான பூமி பூஜை விழா நேற்று நடந்தது.
விழாவிற்கு, கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு, நாவற்குளம் வார்டு பகுதி முழுதும் தார் மற்றும் சிமென்ட் சாலை அமைக்கும் பணியினை பூஜை செய்து துவக்கி வைத்தார்.
இதில், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் தீனதயாளன், கண்காணிப்பு பொறியாளர் வீரச்செல்வம், செயற்பொறியாளர் சீனுவாசன், உதவிப் பொறியாளர் பார்த்தசாரதி, இளநிலைப் பொறியாளர் லோகநாதன் மற்றும் நாவற்குளம் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.