
திருபுவனை: கலிதீர்த்தாள்குப்பம் கிராமத்தில் ரூ.46 லட்சம் செலவில் சாலை அமைக்கும் பணியை அங்காளன் எம்.எல்.ஏ., நேற்று துவக்கி வைத்தார்.
புதுச்சேரி திருபுவனை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்ட நிதியின் கீழ் ரூ. 46 லட்சம் செலவில் கலிதீர்த்தாள்குப்பம் ராமகிருஷ்ணா நகர் விரிவு , ரமணா நகர் விரிவு, புவனேஸ்வரி நகர் ஆகிய உட்புற சாலைகள் மற்றும் ஜே. எம்.ஜே.கார்டன் முதன்மை சாலைக்கு கருங்கல் ஜல்லி சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை விழா நேற்று நடந்தது.
விழாவிற்கு தொகுதி எம்.எல்.ஏ., அங்காளன் தலைமை தாங்கி பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார்.மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில் ராஜன் முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சியில் உதவிப் பொறியாளர் மல்லிகார்ஜுனன், இளநிலை பொறியாளர் பாஸ்கர், ஒப்பந்ததாரர் சபரிமுத்து, மற்றும் கிராம மக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.