UPDATED : ஆக 20, 2026 08:35 PM
ADDED : ஆக 20, 2026 08:31 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரியில் மாலை பெய்த திடீர் மழையால் குளிர்ச்சியான சூழல் நிலை ஏற்பட்டது.
புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் கடுமையாக வெயில் அடித்தது. இதனால் ஏற்பட்ட கடுமையான வெப்பதால் வீட்டை விட்டு வெளியில் வர முடியாமல் மக்கள் தவித்தனர். இந்நிலையில் மாலை 6:30 மணியளவில், வானம் கருமேகங்கள் சூழ்ந்து இருண்டது. பின் பலத்த சூறைக் காற்றுடன் கன மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. திடீர் மழையால் ஏற்பட்ட குளிர்ச்சியான சூழ்நிலையால், வெப்பத்தில் தவித்த மக்கள் நிம்மதி அடைந்தனர்.
