ADDED : நவ 12, 2025 07:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: லாஸ்பேட்டையில் சாலை ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டன.
புதுச்சேரியில் பொதுமக்களுக்கு இடையூராக உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகள், அனுமதியின்றி பொது இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் பேனர்கள், கட் அவுட்டுகள் மற்றும் கொடிகளை அகற்ற கலெக்டர் குலோத்துங்கன் உத்தரவிட்டார்.
அதன்படி, லாஸ்பேட்டை காமராஜர் மணி மண்டபம் - உழவர் சந்தை, கல்லுாரி சாலை, சின்ன சுப்பையா பிள்ளை வீதிகளில் பொதுப்பணித் துறை, வருவாய்த்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் மூலம் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று நடந்தது.
பொக்லைன் இயந்திரம் உதவியுடன் சாலையின் இரு புறத்திலும் இருந்த ஆக்கிரமிப்பு கடைகள், பெயர் பலகைகள், விளம்பர போர்டுகள், டிஜிட்டல் பேனர்கள் அதிரடியாக அகற்றப்பட்டன.

