/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெருவியாபார மீன் கடையை மூடக்கோரி சாலையோர மீன் வியாபாரிகள் நுாதன போராட்டம்
/
பெருவியாபார மீன் கடையை மூடக்கோரி சாலையோர மீன் வியாபாரிகள் நுாதன போராட்டம்
பெருவியாபார மீன் கடையை மூடக்கோரி சாலையோர மீன் வியாபாரிகள் நுாதன போராட்டம்
பெருவியாபார மீன் கடையை மூடக்கோரி சாலையோர மீன் வியாபாரிகள் நுாதன போராட்டம்
ADDED : செப் 16, 2025 07:07 AM

புதுச்சேரி : இ.சி.ஆரில் பெரு வியாபார மீன் கடையை மூட வலியுறுத்தி சாலையோர மீன் விற்கும் பெண்கள் நேற்று நுாதன போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி இ.சி.ஆர் மடுவுபேட் அருகே மீன் கடை ஒன்று வாடகை இடத்தில் பெரிய அளவில் இயங்கி வருகிறது.
இந்த மீன் கடையால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி இ.சி.ஆரில் சாலையோரம் மீன் விற்கும் மீனவ பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
வியாபாரம் பாதிக்கப்படுவதால், அந்த மீன் கடையை மூட வலியுறுத்தி பல கட்ட போராட்டம் நடத்தினர். இருப்பினும் அந்த மீன்கடை மூடப்படவில்லை. மீன் விற்பனையும் தொடர்ந்து நடந்து வருகின்றது.
ஆவேசமடைந்த மீனவ பெண்கள் நேற்று அந்த மீன் கடையை மூடக்கோரி முற்றுகையிட்டு. வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து தாங்கள் கூடையில் கொண்டு வந்த மீன்களுடன், சர்ச்சைக்குரிய கடையின் முன்பு அமர்ந்தனர். அங்கேயே மீன்களை விற்பனை செய்து நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து இ.சி.ஆரில் மறியலில் ஈடுபட ஆலோசித்தனர். தகவல் அறிந்த லாஸ்பேட்டை போலீசார் போராட்டம் நடத்திய மீனவ பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இந்த பெரு வியாபார மீன் கடையை மூட நடவடிக்கை எடுத்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறியதுடன் போராட்டத்தை தொடர்ந்தனர்.
தொடர்ந்து இருதரப்பினர்களையும் போலீஸ்டேஷனுக்கு அழைத்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சட்ட ஒழுங்கு பிரச்னை எழுந்துள்ளதால் பெரு வியாபார மீன் கடையை தற்காலிக மூட அறிவுறுத்திய லாஸ்பேட்டை போலீசார், மாவட்ட கலெக்டரிடம் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். சாலையோர மீனவ பெண்கள் முதல்வரிடம் முறையிட முடிவு செய்துள்ளனர்.