/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலையோர பள்ளங்கள் மண் கொட்டி சீரமைப்பு
/
சாலையோர பள்ளங்கள் மண் கொட்டி சீரமைப்பு
ADDED : ஜூன் 18, 2025 04:47 AM

பாகூர்: தினமலர் செய்தி எதிரொலியால், கன்னியக்கோவிலில் விபத்து ஏற்படுத்தும் வகையில், சாலையோரம் இருந்த பள்ளங்கள் நேற்று மண் கொட்டி சீரமைக்கப்பட்டது.
புதுச்சேரி - கடலுார் சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. குண்டும் குழியுமாக இருந்த இந்த சாலை கடந்த ஆண்டு புதுப்பிக்கப்பட்டது. சாலை விபத்துக்களை தடுக்கும் வகையில் முக்கிய இடங்களில் சாலையின் நடுவே கான்கிரீட் தடுப்பு கட்டை அமைக்கப்பட்டுள்ளது. இதனால், சாலை குறுகலாக மாறியதால், வாகனங்கள் முந்தி செல்வது பெரும் சவாலான விஷயமாக உள்ளது.அப்படியே முந்தி தான் செல்ல வேண்டும் என்றால், தார் சாலையை விட்டு மண் சாலையில் இரங்கி தான் செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது.
இந்நிலையில், கன்னியக்கோவில் கிழக்கு பக்க சாலையில் தனியார் பெட்ரோல் பங்க் அருகே சாலையோரம், மண் அரிப்பால் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் முந்தி செல்ல முயலும்போதும், வழி விட ஒதுங்கும் போதும், அந்த பள்ளத்தில் சிக்கி நிலை தடுமாறி விபத்தில் சிக்கும் அபாயம் இருந்து வந்தது.இது குறித்து நேற்று தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டு அரசின் கவணத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து, புதுச்சேரி பொதுப்பணித்துறை தேசிய நெடுஞ்சாலை பிரிவு அதிகாரிகள் மற்றும் கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீசார் முதற்கட்டமாக, பள்ளமான இடங்களில் தற்காலிகமாக மண் கொட்டி ஜெ.சி.பி., மூலமாக சமன் செய்து, தார் சாலையில் உள்ள பள்ளங்களை நிரந்திரமாக சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.