/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி சாலையோர மரக்கிளைகள் அகற்றம்
/
விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி சாலையோர மரக்கிளைகள் அகற்றம்
விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி சாலையோர மரக்கிளைகள் அகற்றம்
விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி சாலையோர மரக்கிளைகள் அகற்றம்
ADDED : ஆக 30, 2025 07:39 AM

புதுச்சேரி : விநாயகர் சதூர்த்தியையொட்டி, புதுச்சேரியில் பல இடங்களில் பெரிய அளவில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, பூஜைகள் செய்யப்பட்டன. நாளை விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து சென்று, புதுச்சேரி கடலில் கரைக்கப்பட உள்ளன.
சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்லும் போது, சாலை இருபுறங்களில் மரக்கிளைகள் தாழ்ந்து இருப்பதால், இடையூறு ஏற்படாத வகையில், கிளைகளை அகற்ற, இந்து முன்னணி சார்பில், வனத்துறையினருக்கு கடிதம் மூலம் கோரிக்கை வைத்தனர். அதன்படி, வனத்துறை ஊழியர்கள், நகரின் முக்கிய சாலைகளான காமராஜர் சாலை, நேரு வீதி, காந்தி வீதி, எஸ்.வி.பட்டேல் சாலைகளில் மரக்கிளைகளை நேற்று அகற்றினர். அதே போல, கடற்கரை சாலைகளில் தாழ்வான மரக்கிளைகளை வெட்டி அகற்றினர்.