/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலையோர வியாபாரிகள் சான்றிதழ் பெற அறிவுறுத்தல்
/
சாலையோர வியாபாரிகள் சான்றிதழ் பெற அறிவுறுத்தல்
ADDED : ஜன 13, 2024 07:00 AM
புதுச்சேரி : புதுச்சேரி நகராட்சிக்குட்பட்ட சாலையோரம் கடை வைத்திருப்போர் இதுவரை விற்பனை சான்றிதழ் பெறாதவர்கள் பெற்று கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இதுகுறித்து புதுச்சேரி நகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு :
புதுச்சேரி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலையோரம் வியாபாரம் செய்பவர்கள் , இதுவரை விற்பனை சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை புதுச்சேரி நகராட்சி மூலம் பெறாதவர்கள், வரும் 27ம் தேதிக்குள் அலுவலக நேரத்தில் தங்கள் பெயர், வியாபாரம் செய்யும் இடம், ஆதார் கார்டு நகல், போன்ற விபரங்களை, நெல்லித்தோப்பு பெரியார் நகர், சமுதாய நலக்கூடத்தில் இயங்கி வரும் எம்.யு.எல்.எம்., அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவை நேரடியாக கள ஆய்வு செய்யப்பட்டு, தகுதியான நபர்களுக்கு விற்பனை சான்றிதழ் மற்றும் சாலையோர வியாபாரத்திற்கான அடையாள அட்டை வழங்கப்படும்.
இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.