/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ.5 லட்சம் பொருட்கள் திருட்டு வில்லியனுார் அருகே துணிகரம்
/
ரூ.5 லட்சம் பொருட்கள் திருட்டு வில்லியனுார் அருகே துணிகரம்
ரூ.5 லட்சம் பொருட்கள் திருட்டு வில்லியனுார் அருகே துணிகரம்
ரூ.5 லட்சம் பொருட்கள் திருட்டு வில்லியனுார் அருகே துணிகரம்
ADDED : ஜூன் 25, 2025 03:09 AM
வில்லியனுார் : வில்லியனுார் அருகே தனியார் குடோனில் வைத்திருந்த ரூ. 5 லட்சம் மதிப்பிலான கட்டுமன இரும்பு பொருட்கள் திருடுபோன குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, மூலகுளத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். வில்லியனுார் அடுத்த பொறையூரில் அட்டை கம்பெனி வைத்துள்ளார். இந்த கம்பெனியை வாடகைக்கு விட்டுள்ளார். அப்போது செக்யூரிட்டி அறைக்கு பக்கத்தில் உள்ள குடோனில் கட்டட கட்டுமானத்திற்கு தேவையான பல லட்சம் மதிப்பிலான பொருட்களை வைத்திருந்தார்.
இந்நிலையில் கம்பெனியை வாடகை எடுத்தவர், அட்வான்ஸ் தொகை மற்றும் மாத வாடகையை கொடுக்காமல் இருந்தார். கம்பெனியை காலி செய்யுமாறு வலியுறுத்த சென்றபோது குடோனில் வைத்திருந்த பொருட்களில் இரும்பு கம்பிகள், காப்பர் கம்பிகள், பேனல் போர்டுகள், ஒயர்கள், டேபிள்கள் உள்ளிட்ட ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடுபோனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அதனை தொடர்ந்து திருடுபோனது குறித்து நீதிமன்றத்தில் முறையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார். கோர்ட்டு உத்தரவின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து குடோனில் வைத்திருந்த பொருட்கள் திருபோனது குறித்து விசாரித்து வருகின்றனர்.