/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இன்ஸ்பெக்டர் இல்ல விழாவில் விருந்தினரை வரவேற்ற 'ரோபோ'
/
இன்ஸ்பெக்டர் இல்ல விழாவில் விருந்தினரை வரவேற்ற 'ரோபோ'
இன்ஸ்பெக்டர் இல்ல விழாவில் விருந்தினரை வரவேற்ற 'ரோபோ'
இன்ஸ்பெக்டர் இல்ல விழாவில் விருந்தினரை வரவேற்ற 'ரோபோ'
ADDED : பிப் 04, 2024 04:53 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் நடந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் இல்ல விழாவில், விருந்தினர்களை 'ரோபோ' வரவேற்று உபசரித்தது கண்ட பலரும் வியந்தனர்.
அக்காலத்தில் வீட்டு சுபநிகழ்ச்சிகளுக்கு வரும் விருந்தினரை குடும்ப அங்கத்தினர் வாசலில் நின்று, பன்னீர் தெளித்தும், சந்தனம், பூ, இனிப்பு வழங்கி வரவேற்பர். காலப்போக்கில், விழா வரவேற்பிற்கு வாடகை பெண்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
தற்போது தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக, இல்ல சுப நிகழ்ச்சிகளில் விருந்தினர்களை வரவேற்க 'ரோபோ ஈடுபடுத்தப்பட துவங்கியுள்ளது.
நேற்று முன்தினம் புதுச்சேரியை சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரின் இல்ல சுப நிகழ்ச்சி, புதுச்சேரி நுாறடி சாலையில் உள்ள என்.டி., மகாலில் நடந்தது. விழாவிற்கு வந்த விருந்தினர்களை, தாவணி அணிந்து, தலையில் தொப்பி போட்டு, பெண் போன்று வடிவமைக்கப்பட்ட 'ரோபோ' தேடிச் சென்று பூ மற்றும் இனிப்பு வழங்கி வரவேற்றது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. மேலும், அந்த 'ரோபோ' இருக்கையில் அமர்ந்திருந்தவர்களையும் தேடிச் சென்று பூ, சாக்லெட் வழங்கி வரவேற்றது.
விழாவிற்கு வந்தவர்கள், ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று 'ரோபோ'விடம் பூ மற்றும் இனிப்புகளை எடுத்துக் கொண்டனர்.