/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரோலர் ஸ்கேட்டிங் விழிப்புணர்வு ஊர்வலம்
/
ரோலர் ஸ்கேட்டிங் விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : பிப் 06, 2025 06:45 AM
புதுச்சேரி; புதுச்சேரி கலாம் ரோலர் ஸ்கேட்டிங் கிளப் சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து ரோலர் ஸ்கேட்டிங் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
இந்த ஊர்வலம் இந்திரா காந்தி சதுக்கத்தில் இருந்து கடற்கரை காந்தி சிலை வரை நடைபெற்றது. ஊர்வலத்தை துணை சபாநாயகர் ராஜவேலு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஊர்வலம் மறைமலையடிகள் சாலை, புஸ்சி வீதி வழியாக கடற்கரை சாலை காந்தி சிலையில் நிறைவு பெற்றது. இதில் ரோலர் ஸ்கேட்டிங்கில் சென்றபடி மாணவ-, மாணவிகள் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பாதாகைகள் ஏந்தி சென்றனர்.
இதில் பங்கேற்ற மாணவ-மாணவிகளுக்கு நினைப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதற்கான ஏற்பாடுகளை சங்கத்தின் செயலாளர் காமேஷ்வரன், தலைவர் வெங்கடேசன் மற்றும் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.