/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காரில் கத்தியுடன் சுற்றிய ரவுடி கைது
/
காரில் கத்தியுடன் சுற்றிய ரவுடி கைது
ADDED : அக் 11, 2025 07:17 AM
புதுச்சேரி : எதிரியை கொலை செய்ய கத்தியுடன் காரில் சுற்றிய ரவுடியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
லாஸ்பேட்டை போலீஸ் உதவி சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் நேற்று கருவடிக் குப்பம் - இடையன்சாவடி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக அதிவேகமாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில், கத்தி ஒன்று மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, காரை ஓட்டி வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தியதில், கருவடிக்குப்பம், மேட்டு தெரு சேர்ந்த அர்ஜூனன் மகன் சந்துரு, 30; என்பதும், ரவுடியான அவர் கத்தியை காட்டி பொதுமக்களிடம் பணம் பறிக்கவும், தனது எதிரிகளை கொலை செய்யும் நோக்கத்தில், காரில் கத்தியுடன் சுற்றி திரிந்தது தெரியவந்தது.
இதையடுத்து, கார் மற்றும் கத்தியை பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.