/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எம்.எல்.ஏ.,வை மிரட்டிய ரவுடி குண்டர் சட்டத்தில் கைது
/
எம்.எல்.ஏ.,வை மிரட்டிய ரவுடி குண்டர் சட்டத்தில் கைது
எம்.எல்.ஏ.,வை மிரட்டிய ரவுடி குண்டர் சட்டத்தில் கைது
எம்.எல்.ஏ.,வை மிரட்டிய ரவுடி குண்டர் சட்டத்தில் கைது
ADDED : டிச 14, 2024 04:03 AM

புதுச்சேரி: எம்.எல்.ஏ.,வை மிரட்டிய வழக்கில் கைதான ரவுடி ராமு மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
ஜிப்மர் மருத்துவமனை எதிரில் உழவர்கரை நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாக ஆக்கிரமிப்புகள் குறித்து சிவசங்கர் எம்.எல்.ஏ., உழவர்கரை நகராட்சி ஆணையர் மூலம் நடவடிக்கை எடுத்தார்.
அவரை, வணிக வளாகத்தில் கடை நடத்திய ரவுடி ராமு, கடை ஆக்கிரமிப்பு விவகாரத்தில் தலையிடக்கூடாது என மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து சிவசங்கர் எம்.எல்.ஏ., அளித்த புகாரின்பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார், ரவுடி ராமுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது 28 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதில் பல வழக்குகளில் பிடிவாரண்ட் பிறப்பித்தும், கைது செய்யப்படாமல், ராமு வலம் வந்தார்.
இவரின் நடவடிக்கையை தடுத்த நிறுத்தும் பொருட்டு, போலீசாரின் பரிந்துரையை ஏற்று, ராமுவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் குலோத்துங்கன் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு நகலை, காலாப்பட்டு சிறை அதிகாரிகளிடம் கோரிமேடு போலீசார் நேற்று வழங்கினர்.

