/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பா.ஜ., பிரமுகர் கொலையில் ரவுடியின் கூட்டாளிகள் கைது
/
பா.ஜ., பிரமுகர் கொலையில் ரவுடியின் கூட்டாளிகள் கைது
பா.ஜ., பிரமுகர் கொலையில் ரவுடியின் கூட்டாளிகள் கைது
பா.ஜ., பிரமுகர் கொலையில் ரவுடியின் கூட்டாளிகள் கைது
ADDED : ஏப் 29, 2025 07:06 AM

புதுச்சேரி: புதுச்சேரி, சாமிபிள்ளைத்தோட்டத்தைச் சேர்ந்தவர் உமாசங்கர், 38; காமராஜர் நகர் தொகுதி பா.ஜ., பொறுப்பாளர். ஏப்., 26ம் தேதி இரவு, முகமூடி அணிந்த ஒன்பது பேர் கும்பல், இவரை வெட்டி கொன்றது.
லாஸ்பேட்டை போலீசார், நான்கு தனிப்படைகள் அமைத்து விசாரித்தனர். அதில், சாமிப்பிள்ளை தோட்டத்தை சேர்ந்த ரவுடி கருணா துாண்டுதலில், அவரது கூட்டாளிகள் உமாசங்கரை கொலை செய்தது தெரிந்தது.
கருணா தலைமறைவான நிலையில், அவரது கூட்டாளிகள் செல்வகணபதி, 25, பாலாஜி, 26, உட்பட எட்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
சீனியர் எஸ்.பி., கலைவாணன் கூறுகையில், ''இருவருக்கும் ஓராண்டாக விரோதம் இருந்துள்ளது. அப்பகுதியில் யார் பெரியவர் என்பதில் ஏற்பட்ட போட்டியில் கொலை நடந்துள்ளது.
''கொலையில் அரசியல் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை. முக்கிய குற்றவாளியான கருணா உட்பட நான்கு பேரை தேடி வருகிறோம்,'' என்றார்.

