/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மதுக்கடையை உடைத்து ரூ. 1 லட்சம் திருட்டு
/
மதுக்கடையை உடைத்து ரூ. 1 லட்சம் திருட்டு
ADDED : ஜன 09, 2025 06:19 AM
அடுத்தடுத்து 2 கடைகளை உடைத்து திருட முயற்சி
புதுச்சேரி: புதுச்சேரியில் மதுக் கடையை உடைத்து ரூ. 1 லட்சம் பணம் திருட்டிய மர்ம நபர்கள், அடுத்தடுத்த 2 கடைகளின் ஷட்டரை உடைத்து திருட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி கம்பன் கலையரங்கம் பின்புறம், சின்னசுப்ராய பிள்ளை வீதியில் தி.மு.க., பிரமுகருக்கு சொந்தமான எம்.எஸ்.ஜி., என்ற மதுபான கடை உள்ளது.
நேற்று முன்தினம்இரவு 11:00 மணிக்கு மதுக்கடை மூடப்பட்டது. நேற்று காலை ஊழியர்கள் வழக்கம்போல் கடையே திறக்க வந்தனர்.மதுபான கடை ஷட்டரில் இருந்த 2 பூட்டுகளும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உள்ளே சென்று பார்த்தபோது, கல்லா பெட்டியில் இருந்த ரூ. 1 லட்சம் திருடப்பட்டு இருந்தது.கடையில் இருந்த சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்தபோது, 2 மர்ம நபர்கள் கடைக்குள் புகுந்து பணத்தை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
இது குறித்து ஒதியஞ்சாலை போலீசில் புகார் அளித்தனர்.
அதேபோல் பாரதி வீதி, கந்தப்பமுதலியார் வீதி சந்திப்பில் உள்ள ஸ்டுயோவின் ஷட்டரை அதே மர்ம நபர்கள் உடைக்க முயற்சித்தனர். ஷட்டரில் ஒரு பூட்டை மட்டும் உடைத்து, இரும்பு கம்பி மூலம் திறக்க முயற்சித்தனர். ஷட்டரை திறக்க முடியாததால், அங்கிருந்து தப்பி சென்றனர். அதே வீதியில் ஒரு மொபைல் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை ஷட்டரையும் உடைத்து திருட முயற்சி நடந்ததுள்ளது.
புதுச்சேரி நகர பகுதியில் ஒரே இரவில் அடுத்தடுத்த கடைகளின் பூட்டை உடைக்க முயற்சித்தும், மதுபான கடையில் இருந்து 1 லட்சம் பணம் திருடிச் சென்றம் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒதியஞ்சாலை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் திருட்டு சம்பவம் தொடர்பாக சி.சி.டி.வி., வில் பதிவான காட்சிகள் மூலம் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.