/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆற்றில் இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கல்
/
ஆற்றில் இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கல்
ஆற்றில் இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கல்
ஆற்றில் இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கல்
ADDED : டிச 24, 2024 05:40 AM

புதுச்சேரி: சங்கராபரணி ஆற்றில் மூழ்கி இறந்தவரது குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்பட்டது.
புதுச்சேரியில் நலிவடைந்த ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்காக ஆதிதிராவிடர் நலத் துறை சார்பில், பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதில் ஒரு திட்டமாக எதிர்பாராத விபத்தினால் இறந்தவரது குடும்பத்தினருக்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது.
அதன்படி சங்கராபரணி ஆற்றில் மூழ்கி இறந்த தொண்டமானத்தம் மீனாட்சி கோவில் வீதியை சேர்ந்த பரத் என்பவரின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணத்தை ஆதிதிராவிடர் நலத் துறை சார்பில், முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் சாய்சரவணன்குமார், இயக்குநர் இளங்கோவன், கண்காணிப்பாளர் வேல்முருகன் லெபாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.