/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஒரே மாதத்தில் 271 பேரிடம் ரூ. 10.48 கோடி சுருட்டல்
/
ஒரே மாதத்தில் 271 பேரிடம் ரூ. 10.48 கோடி சுருட்டல்
ஒரே மாதத்தில் 271 பேரிடம் ரூ. 10.48 கோடி சுருட்டல்
ஒரே மாதத்தில் 271 பேரிடம் ரூ. 10.48 கோடி சுருட்டல்
ADDED : டிச 05, 2024 06:42 AM
சைபர் கிரைம் மோசடி கும்பல் அட்டூழியம்
புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சைபர் கிரைம் மோசடிகளில் 271 பேர் சிக்கி, 10.48 கோடி ரூபாயை இழந்துள்ளனர்.
புதுச்சேரியைச் சேர்ந்த 271 பேர், கடந்த நவ., மாதத்தில் சைபர் கிரைம் மோசடிக்காரர்களிடம் சிக்கி 10.48 கோடி ரூபாயை இழந்துள்ளனர்.
இதில் ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என, ஆசை வார்த்தை கூறி, டெலிகிராம், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் மூலம் ஒரு லிங்க் அனுப்பி அதன் மூலம் போலியான பங்கு சந்தையில் முதலீடு செய்வதுபோல் காண்பித்து ரூ. 8 கோடிக்கு மேல் பணம் இழந்துள்ளனர்.
இதேபோல் டெலிகிராம் டாஸ்க் என்ற முறையில் 16 நபர்களும், குறைந்த வட்டியில் கடன் தருவதாக கூறி 11 பேரும், அறிமுகம் இல்லாத நபர்களிடம் இருந்து போன் செய்து பணம் மோசடி செய்ததாக 42 பேர் புகார் அளித்துள்ளனர்.இன்ஸ்டாகிராம், டெலிகிராமில் ஆன்லைனில் குறைந்த விலை பொருட்கள் கிடைக்கிறது என விளம்பர லிங்க் மூலம் 29 பேர் பணம் செலுத்தி, பொருட்களை பெறாமல் ஏமாற்றப்பட்டுள்ளனர்.வங்கி மேலாளர் பேசுவதுபோல் பேசி ஒ.டி.பி., பெற்று 19 நபர்களிடம் பணம் மோசடி செய்துள்ளனர்.சைபர் கிரைம் சீனியர் எஸ்.பி., நாராசைதன்யா கூறுகையில், 'ஆன்லைன் மூலம் வரும் பெரும்பாலான ேஷர் மார்க்கெட், வேலை வாய்ப்பு, குறைந்த விலையில் பொருட்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு, ஒ.டி.பி., கேட்பது, குறைந்த வட்டிக்கு கடன் என இன்ஸ்டாகிராம், டெலிகிராமில் வரும் விளம்பரங்களில் பொதுமக்கள் எச்சரிக்கையோடு இருந்து பணத்தை இழக்காமல் இருக்க வேண்டும்' என்றார்.