தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆவணமின்றி கொண்டு வந்த ரூ.11.33 லட்சம் பறிமுதல்

 ஆவணமின்றி கொண்டு வந்த ரூ.11.33 லட்சம் பறிமுதல்

 ஆவணமின்றி கொண்டு வந்த ரூ.11.33 லட்சம் பறிமுதல்


ADDED : மார் 19, 2026 03:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2026 03:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று முன்தினம் நள்ளிரவு நடத்திய சோதனையில், உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ. 5 லட்சம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன.​

புதுச்சேரி சட்டசபை தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், புதுச்சேரி மாநில எல்லைகளில் தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால், பறக்கும் படையினர் 24 மணி நேரமும் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு 1:00 மணியளவில், காலாப்பட்டு சோதனைச் சாவடி அருகே சித்தானந்தம் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, புதுச்சேரி நோக்கி வந்த கார் ஒன்றை அதிகாரிகள் நிறுத் தி சோதனை செய்தனர். அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்ப ட்டது. ​5 லட்சம் ரூபாய் இந்திய நோட்டுகள், ​5,000 பிரிட்டிஷ் பவுண்டு (இந்திய மதிப்பில் சுமார் 6.18 லட்சம் ரூபாய்) மற்றும் இலங்கை கரன்சிகள் 50,000 ( இந்திய மதிப்பில் 15 ஆயிரம் ரூபாய்) உட்பட மொத்தம் 11 லட்சத்து 33 ஆயிரம் ரொக்கம் இருந்தது.

இதையடுத்து உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பெற்று கொள்ளுமாறு கூறி, அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

நள்ளிரவில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us