தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ரூ.12.72 லட்சம் மோசடி தம்பதி மீது புகார்

ரூ.12.72 லட்சம் மோசடி தம்பதி மீது புகார்

ரூ.12.72 லட்சம் மோசடி தம்பதி மீது புகார்


UPDATED : அக் 31, 2026 11:50 PM

ADDED : அக் 31, 2026 11:47 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 31, 2026 11:50 PM ADDED : அக் 31, 2026 11:47 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுாரில் தீபாவளி சீட்டு நடத்தி, ரூ. 12.72 லட்சம் மோசடி செய்த தம்பதி மீது பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் மனு அளித்தனர்.

இதுகுறித்து கடலுார் எஸ்.பி., அலுவலகத்தில் முதுநகரை சேர்ந்த பக்கிர் முகமது மனைவி பேகம் உள்ளிட்டோர் அளித்த மனு:

கடலுார், குண்டு உப்பலவாடி தம்பதி, சிறுசேமிப்பு திட்டம் நடத்தினர். அதில், கடந்த 3 ஆண்டுகளாக தீபாவளி சீட்டு கட்டினேன். இதற்கான முதிர்வு தொகை மற்றும் தீபாவளி பரிசு பொருட்களை சரியாக வழங்கினர். அந்த நம்பிக்கையில் நானும், தெரிந்த நபர்கள் என, 50 பேர் வெவ்வேறு தொகையில் இந்தாண்டு தீபாவளி சீட்டு கட்டினோம். தவணை காலம் முடிந்தும் முதிர்வு தொகை மற்றும் தீபாவளி பரிசு பொருட்கள் வழங்கவில்லை. எனவே, 12 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் மோசடி செய்து தலைமறைவான தம்பதி மற்றும் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us