தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ரூ.15 லட்சம் மோசடி புகார் 'மாஜி' எம்.எல்.ஏ., மீது வழக்கு

 ரூ.15 லட்சம் மோசடி புகார் 'மாஜி' எம்.எல்.ஏ., மீது வழக்கு

 ரூ.15 லட்சம் மோசடி புகார் 'மாஜி' எம்.எல்.ஏ., மீது வழக்கு


ADDED : ஆக 22, 2026 11:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 22, 2026 11:41 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காரைக்கால்: காரைக்காலில், 15 லட்சம் ரூபாய் மோசடி புகாரில், திருநள்ளாறு சுயேச்சை முன்னாள் எம்.எல்.ஏ., சிவா, 52, அவரது நண்பர் பரத்குமார் காந்தி, 50, மீது, போலீசார் வழக்கு பதிந்தனர்.

புதுச்சேரி மாநிலம், காரைக்கால், திருநள்ளாறை சேர்ந்தவர் முகமது நிஜாம், 59, அதே பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவர், திருநள்ளாறு காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனு:

கடந்த, 2023 ஆக., 28ல் திருநள்ளாறு முன்னாள் எம்.எல்.ஏ., சிவா கேட்டதால், தன் வங்கி கணக்கின் மூலம், 15 லட்சம் ரூபாய் அனுப்பியதாகவும், பணத்தை திருப்பி கேட்டதற்கு, 2024 ஏப்., 4ல் சிவா கொடுத்த வங்கி காசோலை, பணம் இல்லாமல் திரும்பியது.

சிவாவிடம் கேட்டதற்கு, சத்துவாச்சாரியை சேர்ந்த பரத்குமார் காந்தியிடம் பணத்தை பெற்றுக்கொள்ளும்படி கூறினார். அவர் கொடுத்த, 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையும், வங்கியில் பணம் இல்லாமல் திரும்பியது. சிவா, பரத்குமார் காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

போலீசார், சிவா, பரத்குமார் காந்தி மீது, வழக்கு பதிந்து, விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us