தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பல்கலை., துணைவேந்தரை கண்டித்து 3 நாளாக மாணவர்கள் போராட்டம்

பல்கலை., துணைவேந்தரை கண்டித்து 3 நாளாக மாணவர்கள் போராட்டம்

பல்கலை., துணைவேந்தரை கண்டித்து 3 நாளாக மாணவர்கள் போராட்டம்


ADDED : ஆக 22, 2026 11:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 22, 2026 11:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழக துணை வேந்தரை கண்டித்து  மாணவர்கள் 3வது நாளாக போராட்டம் நடத்தினர்.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நிதி மேலாண்மை கையாளுவதில் தவறு நடந்துள்ளதாக ஏ.பி.வி.பி., மாணவர் அமைப்பினர் துணை வேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று 3வது நாளாக நடந்த தொடர் போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் கை மற்றும்  கண்களை கருப்பு துணியால் கட்டிக் கொண்டு, மாணவர்களிடமிருந்து வசூலிக்கும் பணத்தை தன்னுடைய அலுவலகத்தை ஆடம்பரமாக கட்டமைப்பதில் செலவு செய்யும் துணை வேந்தர், மாணவர்களின் அடிப்படை உரிமையான விடுதி உணவு, குடிநீர் குறைபாடு, தங்கும் விடுதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என, வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us