/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
3 பேரிடம் ரூ.18 லட்சம் 'அபேஸ்': சைபர் கிரைம் கும்பல் கைவரிசை
/
3 பேரிடம் ரூ.18 லட்சம் 'அபேஸ்': சைபர் கிரைம் கும்பல் கைவரிசை
3 பேரிடம் ரூ.18 லட்சம் 'அபேஸ்': சைபர் கிரைம் கும்பல் கைவரிசை
3 பேரிடம் ரூ.18 லட்சம் 'அபேஸ்': சைபர் கிரைம் கும்பல் கைவரிசை
ADDED : பிப் 23, 2024 03:36 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் இரண்டு பெண்கள் உட்பட 3 பேரிடம் ரூ. 18 லட்சம் மோசடி செய்தவரை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.
கனடா நாட்டில் வேலை இருப்பதாக யாஷிகா என்ற தனியார் கன்சல்டன்ட் நிறுவனம் பேஸ் புக்கில் விளம்பரம் செய்திருந்தது. விளம்பர செய்த நிறுவனத்தின் மேலாளரை மொபைல் மூலம், பாகூரை சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவர் மற்றும் சிலருக்கு வேலை வேண்டும் என, தொடர்பு கொண்டு கேட்டார்.
வேலைக்கு சேர வேண்டும் என்றால், பள்ளி சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் ஸ்கேன் செய்து, அனுப்ப வேண்டும் என அந்த நபர் கூறியதை, அடுத்து அனைத்து சான்றிதழ்களை அந்த பெண் அனுப்பினார். சான்றிதழ்கள் எல்லாம் சரியாக இருப்பதாகவும், வேலைக்கு சேர முன் பணம் அனுப்ப வேண்டும் என கூறியதை நம்பி அந்த பெண், தவணை முறையில் தனது வங்கி கணக்கில் இருந்து மொத்தம் 11.66 லட்சம் ரூபாயை ஆன்லைன் மூலம் அனுப்பினார்.
பிறகு அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்ட போது, அது போன்ற நிறுவனம் கனடா நாட்டில் இல்லை எனவும் அது போலியான நிறுவனம் என, தெரியவந்தது.
அதேபோல், ஆன்லைன் மூலம் பணத்தை முதலீடு செய்தால், அதிக பணம் சம்பாதிக்கலாம் என மர்ம நபர் கூறியதை நம்பி புதுச்சேரியை சேர்ந்த சோபனா என்ற பெண் 3.40 லட்சம் ரூபாயை அனுப்பி ஏமார்ந்தார்.
கார்த்திக்ராஜன் என்பவர், பகுதி நேர வேலை இருப்பதாக மர்ம நபர் கூறியதை நம்பி, 2.95 லட்சம் ரூபாயை அனுப்பி ஏமார்ந்தார். மூவரும் கொடுத்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து, ஆன்லைன் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.