ADDED : பிப் 01, 2026 05:17 AM
புதுச்சேரி: வில்லியனுாரை சேர்ந்தவர் கடந்த 10 ஆண்டுகளாக தனியார் நிதி நிறுவனத்தில் காப்பீட்டு பாலிசி செலுத்தி வந்தார். அந்த பாலிசி பணத்தை எடுக்க முயன்றபோது, அவரை தொடர்பு கொண்ட மர்மநபர் பாலிசி பணத்தை பெற கட்டணம் செலுத்தும்படி தெரிவித்தார்.
இதை நம்பிய அவர், மர்மநபருக்கு ரூ.19 லட்சத்து 5 ஆயிரத்து 467 செலுத்தி ஏமாந்தார்.காலாப்பட்டை சேர்ந்தவரை வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர், ஆன்லைனில் டிரேடிங் செய்வது தொடர்பான வாட்ஸ் ஆப் குரூப் ஒன்றில் இணைத்துள்ளார்.
அதன்பின், மர்மநபர் தெரிவித்த போலி ஆன்லைன் டிரேடிங்கில் பல்வேறு தவணைகளாக ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் முதலீடு செய்து இழந்துள்ளார்.
இதேபோல், கூடப்பாக்கத்தை சேர்ந்தவர் 20 ஆயிரம், புதுச்சேரியை சேர்ந்தவர் 41 ஆயிரத்து 186, உருளையன்பேட் டையை சேர்ந்த பெண் 11 ஆயிரத்து 111, என, ஐந்து பேர் சைபர் கிரைம் கும்பலிடம் 21 லட்சத்து 27 ஆயிரத்து 764 ரூபாய் இழந்துள்ளனர்.
இதுகுறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
