/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இ-மெயிலில் மோசடி ரூ.2.25 லட்சம் மீட்பு
/
இ-மெயிலில் மோசடி ரூ.2.25 லட்சம் மீட்பு
ADDED : டிச 25, 2024 04:11 AM

காரைக்கால் : இ-மெயில் மூலம் கடன் தொகையை வசூலித்து மோசடி செய்த பணம் ரூ.2.25 லட்சத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.
காரைக்காலை சேர்ந்தவர் அம்பிகாபதி,55; இவர் அரசு உதவிபெறும் பள்ளியில் பணி புரிந்து வருகிறார்.
இவர், தனியார் நிறுவனத்தில் வாங்கிய கடனை, முன்கூட்டியே முடிப்பதற்காக, கஸ்டமர் கேரை இமெயிலில் தொடர்பு கொண்டார். அப்போது, அவருக்கு வந்த இ-மெயில் முகவரியில் கடன் தொகை ரூ.2 லட்சத்து 25 ஆயிரத்து 725யை செலுத்தினார்.பணம் செலுத்திய சில நாட்களுக்கு பிறகும், கடன் கணக்கு முடியாமல் இருந்ததால் சந்தேகமடைந்த அம்பிகாபதி, நிதி நிறுவனத்தை இ-மெயிலில் தொடர்பு கொண்டபோது, தங்கள் கணக்கில் எந்த பணமும் வரவில்லை எனக்கூறினர்.
இதுகுறித்து அம்பிகாபதி அளித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் பிரவீன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி, அம்பிகாபதி பணம் கட்டிய அக்கவுண்டை முடக்கி மோசடி செய்த ரூ.2 லட்சத்து 25 ஆயிரத்து 725யை மீட்டனர். இந்த பணத்தை சீனியர் எஸ்.பி.,லட்சுமி சவுசன்யா, அம்பிகாபதியிடம் வழங்கினார்.

