/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வேலை வாங்கி தருவதாக ரூ.2.35 லட்சம் மோசடி
/
வேலை வாங்கி தருவதாக ரூ.2.35 லட்சம் மோசடி
ADDED : ஏப் 01, 2025 04:11 AM
புதுச்சேரி: பகுதிநேர வேலைக்காக ஆன்லைனில் முதலீடு செய்து புதுச்சேரி நபர் ரூ.2.35 லட்சத்தை மோசடி கும்பலிடம் இழந்துள்ளார்.
முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சபரிநாதன், இவரை டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், பகுதிநேர வேலையாக ஆன்லைனில் முதலீடு செய்து வீட்டில் இருந்தபடி அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறியுள்ளார்.
இதைநம்பி சபரிநாதன் மர்ம நபர் தெரிவித்த ஆன்லைன் வர்த்தகத்தில் 2 லட்சத்து 35 ஆயிரம் அனுப்பி, அவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளை முடித்து வந்துள்ளார். அதன் மூலம் வந்த லாபப் பணத்தை தனது வங்கி கணக்கிற்கு மாற்ற முயன்றபோது முடியவில்லை. மேலும், அந்த மர்ம நபரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன்பிறகே, மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது.
இதேபோல், அரியாங்குப்பத்தை சேர்ந்த அனுபாமா ஜெயஸ்ரீ 12 ஆயிரம், ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த விக்ரம் 10 ஆயிரம் என 3 பேர் சைபர் மோசடி கும்பலிடம் 2 லட்சத்து 57 ஆயிரத்து 300 ரூபாய் இழந்துள்ளனர்.
இதுகுறித்த புகாரின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.