/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ.27 லட்சம் மோசடி: மர்ம நபருக்கு வலை
/
ரூ.27 லட்சம் மோசடி: மர்ம நபருக்கு வலை
ADDED : டிச 16, 2024 04:37 AM
புதுச்சேரி : புதுச்சேரி அரும்பார்த்தபுரம் சேக்கிழார் வீதியை சேர்ந்தவர் மகேஷ்குமார். இவரை இ-மெயில் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என கூறியுள்ளார்.
இதைநம்பி மகேஷ்குமார் பல்வேறு தவணைகளாக மர்ம நபர் தெரிவித்த ஆன்லைன் வர்த்தக பங்குசந்தையில் ரூ. 27 லட்சத்து 25 ஆயிரத்து 389 செலுத்தியுள்ளார்.
இதற்கு, ரூ.30 லட்சம் லாபம் கிடைத்துள்ளதாக காட்டியுள்ளனர். இதையடுத்து, லாப பணத்தை மகேஷ்குமார் எடுக்க முயன்றபோது, முடியவில்லை.
பின்னர், மர்ம நபரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன்பிறகே ஆன்லைன் மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது மகேஷ்குமாருக்கு தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.