/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலையில் திரிந்த 116 மாடுகளுக்கு ரூ.2.78 லட்சம் அபராதம்
/
சாலையில் திரிந்த 116 மாடுகளுக்கு ரூ.2.78 லட்சம் அபராதம்
சாலையில் திரிந்த 116 மாடுகளுக்கு ரூ.2.78 லட்சம் அபராதம்
சாலையில் திரிந்த 116 மாடுகளுக்கு ரூ.2.78 லட்சம் அபராதம்
ADDED : பிப் 04, 2025 05:55 AM
புதுச்சேரி: சாலையில் திரிந்த 116 மாடுகளை பிடித்து, ரூ. 2.78 லட்சம் அபராதம் விதித்தனர்.
உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
சாலையில் மாடுகளை திரிய விடுவதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு அதிக அளவில் விபத்துக்கள் நிகழ்வதால், உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மாடுகள் வளர்ப்போர் தங்கள் மாடுகளை சாலைகள், பொது இடங்களில் திரிய விட வேண்டாம். தவறினால் மாடுகளை பிடித்து அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை செய்யப்பட்டது.
இதனை மீறி சாலையில் சுற்றி திரிந்த 4 மாடுகள் பிடித்து கடந்த 30ம் தேதி 11,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இதுவரை 116 மாடுகள் பிடிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் இருந்து ரூ. 2,78,920 அபராதம் வசூலிக்கப்பட்டு, மாடுகளை சாலையில் திரிய விடமாட்டோம் என்று உறுதிமொழி பெற்று பின் விடுவிக்கப்பட்டது.
இருந்தும் மாடுகள் தொடர்ந்து சாலையில் திரிவதாக புகார்கள் வந்ததால் சாலையில் திரியும் மாடுகளை பிடிக்க நகராட்சி சிறப்பு நடவடிக்கை எடுக்க உள்ளது.
எனவே, மாட்டின் உரிமையாளர்கள் தங்கள் மாடுகளை சாலையில் திரிய விட வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.