/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கவர்னராக தமிழிசை இருந்தபோது 3 ஆண்டுகளில் ரூ.2.99 கோடி செலவு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் தகவல்
/
கவர்னராக தமிழிசை இருந்தபோது 3 ஆண்டுகளில் ரூ.2.99 கோடி செலவு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் தகவல்
கவர்னராக தமிழிசை இருந்தபோது 3 ஆண்டுகளில் ரூ.2.99 கோடி செலவு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் தகவல்
கவர்னராக தமிழிசை இருந்தபோது 3 ஆண்டுகளில் ரூ.2.99 கோடி செலவு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் தகவல்
ADDED : அக் 04, 2024 03:23 AM
புதுச்சேரி: புதுச்சேரி கவர்னராக தமிழிசை இருந்த 3 ஆண்டுகளில் அவருக்கு ரூ. 2 கோடியே 99 லட்சம் செலவாகியுள்ளதாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் தகவல்கள் தரப்பட்டுள்ளன.
கடந்த 2019ல் தமிழக பா.ஜ., தலைவராக இருந்த தமிழிசை தெலுங்கானா மாநில முதல் பெண் கவர்னராக பதவியேற்றார்.
கடந்த 2021ல் புதுச்சேரி மாநில கவர்னராக அவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. அவர் தனது பதவியை கடந்த மார்ச்சில் ராஜினாமா செய்து லோக்சபா தேர்தலில் போட்டியிட்டார்.
இந்நிலையில் புதுச்சேரியை சேர்ந்த அசோக் ராஜா என்பவர், தமிழிசை கவர்னராக இருந்த போது, அவர் செலவிட்ட தொகை தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கோரியிருந்தார்.
அதன் அடிப்படையில் கவர்னர் மாளிகை பொது தகவல் அதிகாரி செந்தில்குமார் பதில் தந்துள்ளார் அதன் விவரம்:
கவர்னராக தமிழிசை இருந்தபோது அவரும், அவரது அரசு விருந்தினர்களுக்கு என்று பூங்கொத்து உணவு மளிகை எரிவாயு உட்பட 2021-- 22ல் 90.86 லட்சம் ரூபாய், 202 - 23ல் 54.19 லட்சம் ரூபாய், 2023 - 24ல் 91.59 லட்சம் செலவாகி உள்ளது.
கவர்னர் மற்றும் அவரின் அணிவகுப்பு வாகனங்களுக்கு எரிபொருள் பராமரித்தல் உள்ளிட்ட செலவுகளுக்கு 2021--22ல் எரிபொருள் மற்றும் பராமரிப்பு செலவாக 30.71 லட்சம் 2022- -- 23ல் 21. 19 லட்சம், 2023 -24 ஆண்டில் 10. 95 லட்சம் ரூபாய் செலவாகி உள்ளது.
முன்னாள் கவர்னர் தமிழிசைக்கு வந்த பரிசு பொருட்கள் குறித்து தகவல் இச்செயலகத்தில் இல்லை. அவரின் விமான செலவுக்கு இந்தச் செயலகம் ரூ.21,324 செலவு செய்துள்ளது. அவரின் பிற விமான பயணங்களில் செலவுகளை தெலுங்கானா மாநில அரசு ஏற்றுள்ளது.
மொத்தமாக கடந்த 2021- 22ல் 1 கோடியே 21 லட்சம், 2022- - 23ல் 75 லட்சத்து 38 ஆயிரம், 2023- - 24ல் 1 கோடியே 2 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

