ADDED : டிச 07, 2024 07:02 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் 4 பேர் ஆன்லைன் மோசடி கும்பலிடம் ரூ. 2 லட்சத்து 97 ஆயிரம் இழந்துள்ளனர்.
அரியாங்குப்பத்தை சேர்ந்த கந்தன், ஆன்லைனில் பழைய மொபைல் விற்பனைக்கு உள்ளதா என தேடினார்.
அவரை பேஸ்புக் மூலம் தொடர்பு கொண்ட நபர் மொபைல் விற்பனைக்கு உள்ளதாகவும், அதற்கான பணத்தை அனுப்பினால், கொரியர் மூலம் மொபைல் போனை அனுப்புவதாக கூறியுள்ளார். இதைநம்பி கந்தன் 12 ஆயிரம் அனுப்பி ஏமாந்தார்.
மேட்டுப்பாளையத்தை சேர்ந்த தனசேகர் ராமலிங்கம், என்பவரது கிரெடிட் கார்டில் மர்ம நபர்கள் ரூ.2 லட்சம் எடுத்துள்ளனர். குருமாம்பேட் வினோத் ரூ. 47 ஆயிரம், காரைக்கால் முகமது காசிம் 38 ஆயிரம் என, 4 பேர் 2 லட்சத்து 97 ஆயிரம் ரூபாயை மோசடி கும்பலிடம் இழந்தனர்.
புகார்களின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.