UPDATED : நவ 27, 2026 12:08 AM
ADDED : நவ 27, 2026 12:08 AM
புதுச்சேரி: பெண்ணிடம் ரூ. 30.50 லட்சம் மோசடி செய்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ரெட்டியார்பாளையம், பாலாஜி நகரைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி, 50. இவரது கணவர் வெளிநாட்டில் உள்ளார். ராஜலட்சுமியிடம், முதலியார்பேட்டை சேர்ந்த முருகன், 56, என்பவர் என்னிடம் பணம் கொடுத்தால் டிரேடிங் மூலம் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என, ஆசை வார்த்தை கூறினார்.
இதனை நம்பிய ராஜலட்சுமி அவரிடம் பல தவணைகளாக 30 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிய முருகன் பணத்தை டிரேடிங் மூலம் முதலீடு செய்து ஒரு கோடி தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.
அதன்படி அவர் பணம் கொடுக்கவில்லை. இதுதொடர்பாக ராஜலட்சுமி, முருகனிடம் கேட்டபோது பணம் கொடுக்க முடியாது. இனிமேல் பணம் கேட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதுகுறித்து ராஜலட்சுமி ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்த வருகின்றனர்.
