/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் 3 பேரிடம் ரூ. 40 ஆயிரம் 'அபேஸ்'
/
புதுச்சேரியில் 3 பேரிடம் ரூ. 40 ஆயிரம் 'அபேஸ்'
ADDED : மார் 16, 2025 11:44 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் 3 பேரிடம் 40 ஆயிரம் ரூபாய் சைபர் கிரைம் குற்றவாளிகள் மோசடி செய்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
ரெட்டியார்பாளையத்தை சேர்ந்தவர் அசோக்.
இவர் செயலி மூலம் கடன் வங்கி அந்த கடனை அடைத்துள்ளார். ஆனால், இவரை மொபைலில் தொடர்பு கொண்ட மர்மநபர், கடன் பாக்கி உள்ளதாகவும், அதனால், மார்பிங் செய்த போட்டோவை வெளியிடுவதாக மிரட்டினார். அதற்கு பயந்து அவர், 7 ஆயிரம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார்.
இதேபோன்று, முதலியார்பேட்டையை சேர்ந்தவர் சந்திரமோகன பழனி. இவர் ஆன்லைனில் முதலீடு செய்தால், பணம் சம்பாதிக்கலாம் மர்மநபர் கூறியதை கேட்டு, 24 ஆயிரம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார்.
கதிர்காமத்தை சேர்ந்தவர் ஸ்ரீராம். இவர் சென்னையில் ஓட்டலில் தங்குவதற்கு ஆன்லைனில் தேடியுள்ளார். ஆன்லைனில் கிடைத்த ஓட்டல் தொடர்பான மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு, 9 ஆயிரம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார்.
புகார்களின்பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.