/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொங்கல் பரிசாக ரூ.5 ஆயிரம்: அ.தி.மு.க., அன்பழகன் கோரிக்கை
/
பொங்கல் பரிசாக ரூ.5 ஆயிரம்: அ.தி.மு.க., அன்பழகன் கோரிக்கை
பொங்கல் பரிசாக ரூ.5 ஆயிரம்: அ.தி.மு.க., அன்பழகன் கோரிக்கை
பொங்கல் பரிசாக ரூ.5 ஆயிரம்: அ.தி.மு.க., அன்பழகன் கோரிக்கை
ADDED : ஜன 01, 2026 04:06 AM
புதுச்சேரி: புத்தாண்டு பரிசாக அனைத்து ரேஷன் கார்டிற்கும் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என, அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
புதுச்சேரி கல்வித் துறையில் கவுரவ விரிவுரையாளர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், பாலசேவிகா போன்ற 292 பணியிடங்கள் கடந்த தி.மு.க., - காங்., கூட்டணி ஆட்சியில் சட்ட விரோதமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட்டன.
கடந்த 5 ஆண்டிற்கு மேலாக குறைந்த சம்பளத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிந்து வரும் இவர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அரசுப் பணியிடங்களில் ஒப்பந்த ஊழியர்கள், தினக்கூலி ஊழியர்கள், தொகுப்பு ஊழியர்கள் சம்பந்தமாக உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் நடை பெற்ற வழக்கின் மேல்முறையீட்டில் உச்சநீதி மன்றம், பணியிடங்களில் பணிபுரியவர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய தடை இல்லை என, தீர்ப்பு வழங்கி உள் ளது.
அதனடிப்படையில், பல ஆண்டுகளாக குறைந்த சம்பளத்தில் ஒப்பந்த ஊழியர்களாக பணிபுரிந்து வரும் ஆசிரியர்களை முதல்வர் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இதற்கான ஆணையை முதல்வர் பிறக்கும் 2026 புத்தாண்டின் பரிசாக அறிவிக்க வேண்டும்.
அனைத்து தரப்பு மக்களுக்கும் பொங்கல் பரிசாக ரேஷன் கார்டிற்கு ரூ.5,000 வழங்க முதல்வர் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.

