/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போட்டோ ஷூட் நடத்த ரூ. 500 கட்டணம்
/
போட்டோ ஷூட் நடத்த ரூ. 500 கட்டணம்
ADDED : ஏப் 29, 2025 04:24 AM
புதுச்சேரியில் பிரெஞ்சு பாரம்பரிய கட்டடங்கள், ஏராளமான நினைவுச் சின்னங்கள் உள்ளன. புதுச்சேரிக்கு சுற்றுலா வரும் பயணிகள் இந்த பாரம்பரிய கட்டடங்கள், கோடு போட்டது போன்று நேராக இருக்கும் சாலைகளில் முன் போட்டோ ஷூட் மற்றும் வீடியோ எடுத்து மகிழ்கின்றனர். இதேபோல், பாரதி பூங்காவிலும் போட்டோ எடுத்தும், 'செல்பி' எடுத்தும் மகிழ்ந்து வருகின்றனர்.
குறிப்பாக பாரதி பூங்காவில் உள்ள ஆயி மண்டபம், புல் தரை, சிற்பங்களுடன் கூடிய கலை நயமிக்க கல்தூண்கள் அருகே 'போட்டோ ஷூட்' எடுக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் பாரதி பூங்கா மூலம் புதுச்சேரி நகராட்சி வருவாயை ஈட்டும் வகையில் புதிய அறிவிப்பை வெளியிட்டு பாரதி பூங்கா முன்பு வைத்துள்ளது. அதில் பாரதி பூங்காவில் போட்டோ ஷூட் மற்றும் வீடியோ எடுக்க நகராட்சியின் வருவாய் பிரிவை அணுகி அனுமதி பெற வேண்டும். இதற்கு ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும். அப்போதுதான் அனுமதி வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
நகராட்சி அதிகாரிகள் கூறும்போது. பாரதி பூங்காவில் புகைப்படங்கள், வீடியோ எடுப்பவர்களிடம் கட்டணம் வசூலிக்கும் முறை நடைமுறைக்கு வந்துள்ளது. அதேநேரத்தில் பூங்காவுக்கு வருவோர் மொபைல் போன்களில் படம் எடுக்க எந்த தடையுமில்லை. கேமராக்கள் மூலம் படம் எடுக்க மட்டுமே கட்டணம் செலுத்தி அனுமதி பெற வேண்டும் என்றனர்.
எங்கு அனுமதி பெற வேண்டும்: பாரதி பூங்காவில் போட்டோ,வீடியோ ஷூட் எடுக்க ஆம்பூர் சாலையில் உள்ள புதுச்சேரி நகராட்சியின் வருவாய் பிரிவு-2 அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு அனுமதி பெறலாம். மேலும் விபரங்களுக்கு 0413-2970239, 9787601545, 8220335736 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

