/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வேலை வாங்கி தருவதாக ரூ.54 லட்சம் மோசடி
/
வேலை வாங்கி தருவதாக ரூ.54 லட்சம் மோசடி
ADDED : நவ 11, 2025 06:43 AM
வில்லியனுார்: தமிழக மின்துறையில் கான்ராக்ட் பெற்றுத் தருவதாக மோசடியில் ஈடுபட்ட இளநிலை பொறியாளர் உள்ளிட்ட இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, வில்லியனுார் கணுவாப்பேட்டை புதுநகரை சேர்ந்தவர் பக்கிரிசாமி மகன் பிரகாஷ்,45; இவருக்கு, திருவண்ணாமலையை சேர்ந்த நண்பர் விக்னேஷ் மூலம் ஆரணி வி.ஐ.பி., நகரை சேர்ந்த சுந்தரேசன் மகன் வினாயகமூர்த்தி,47; என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
வினாயகமூர்த்தி, தமிழக அரசு மின் துறையில் இளநிலைப் பொறியாளராக வேலை செய்து வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளநிலை பொறியாளர் வினாயகமூர்த்தி மற்றும் விக்னேஷ் ஆகியோர் சேர்ந்து, தமிழக மின் துறையில் சிவில் ஒர்க் செய்வதற்கு கான்ட்ராக்ட் எடுத்து தருவதாக பிரகாஷிடம் ஆசைவார்த்தை கூறி, அவரிடம் இருந்து இரு தவணையாக ரூ. 54 லட்சம் பெற்றுள்ளனர். ஆனால் கூறியபடி, அரசு வேலையோ அல்லது ஒப்பந்த பணியோ எடுத்து கொடுக்காமல் வினாயகமூர்த்தி, காலம் கடத்தி வந்துள்ளார்.
இது குறித்து பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில், வினாயகமூர்த்தி உள்ளிட்ட இருவர் மீது வில்லியனுார் சப் இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

