ADDED : ஜூலை 13, 2025 05:43 AM
புதுச்சேரி : சைபர் மோசடி கும்பலிடம் புதுச்சேரியை சேர்ந்த 4 பேர் ரூ.5.96 லட்சம் ஏமாந்துள்ளனர்.
கிருமாம்பாக்கத்தை சேர்ந்தவர் மகேஷ்குமார், 45. இவரை தொடர்பு கொண்ட மர்மநபர் ஆன்லைனில் பகுதி நேர வேலையாக தகவல் பதிவில் முதலீடு செய்து, பணிகளை முடித்தால், அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறியுள்ளார். இதைநம்பிய அவர், மர்மநபர் அறிவுறுத்தலின்படி, 4 லட்சத்து 68 ஆயிரத்து 127 ரூபாய் முதலீடு செய்து ஏமாந்தார்.
இதேபோல், முதலியார்பேட்டையை சேர்ந்த நபர் 89 ஆயிரத்து 680, புதுச்சேரி 100 அடி சாலையை சேர்ந்த நபர் 11 ஆயிரத்து 800, செயின்ட் மார்டின் வீதியை சேர்ந்த நபர் 27 ஆயிரத்து 160 என 4 பேர் சைபர் மோசடி கும்பலிடம் 5 லட்சத்து 96 ஆயிரத்து 767 ரூபாய் ஏமாந்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.