/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் ரூ.60 கோடி மோசடி; தொழிலதிபர் சிறையில் அடைப்பு: அமலாக்க துறை அதிரடி
/
புதுச்சேரியில் ரூ.60 கோடி மோசடி; தொழிலதிபர் சிறையில் அடைப்பு: அமலாக்க துறை அதிரடி
புதுச்சேரியில் ரூ.60 கோடி மோசடி; தொழிலதிபர் சிறையில் அடைப்பு: அமலாக்க துறை அதிரடி
புதுச்சேரியில் ரூ.60 கோடி மோசடி; தொழிலதிபர் சிறையில் அடைப்பு: அமலாக்க துறை அதிரடி
ADDED : செப் 10, 2025 08:59 AM

புதுச்சேரி; புதுச்சேரியில் ரூ.60 கோடி மோசடி செய்த கேரளாவை சேர்ந்த 'கோ பிரி சைக்கிள்' நிறுவனத்தின் உரிமையாளரை அமலாக்க துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி, சாரம், காமராஜர் சாலையில் இயங்கி வந்த 'கோ பிரி சைக்கிள்' நிறுவனம், சுற்றுலா சைக்கிள் திட்டத்தில் முதலீடு செய்ய வைத்து, மோசடி செய்வதாக புகார் எழுந்தது. அதன்பேரில் சைபர் கிரைம் போலீசார், கடந்த ஏப்ரல் 3ம் தேதி நிறுவனத்தில் அதிரடியாக சோதனை நடத்தி, கணக்கில் வராத பணம் ரூ. 2.45 கோடி மற்றும் சில ஆவணங்களை பறிமுதல் செய்து, நிறுவனத்திற்கு 'சீல்' வைத்தனர்.
சைபர் கிரைம் போலீசாரின் தகவலின் பேரில், இந்த நிறுவனத்தை, கடந்த ஏப்., 5ம் தேதி சென்னை அமலாக்கத் துறை துணை இயக்குநர் நளினி ரவிக்கிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் சோதனை நடத்தினர்.
அதில், அங்கிருந்த 13 வங்கி கணக்குகளை ஆய்வு செய்ததில், புதுச்சேரியில் மட்டும் ரூ.60 கோடிக்கு மேல் மோசடி செய்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, 13 வங்கி கணக்குகளை முடக்கம் செய்தனர். மேலும், ஏற்கனவே போலீசார் பறிமுதல் செய்த பணம் ரூ.2.45 கோடியை வங்கியில் டிபாசிட் செய்தனர்.
இந்த மோசடி சம்பவம் தொடர்பாக, கோ பிரி சைக்கிள் நிறுவனத்தின் உரிமையாளரான கேரளாவை சேர்ந்த நிஷாந்த் அகமது உள்ளிட்டோரை சைபர் கிரைம் போலீசார் தேடி வந்தனர்.
அதே நேரத்தில், நிஷாந்த் அகமது, வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக அமலாக்க துறை சார்பில் 'ரெட் கார்னர் நோட்டீஸ்' வழங்கப்பட்டது. மேலும், அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு சென்னை அமலாக்க துறையினர் நான்கு முறை சம்மன் அனுப்பினர். ஆனால், அவர் ஆஜராகவில்லை. தொடர்ந்து 5ம் முறையாக அனுப்பிய சம்மனை ஏற்ற நிஷாந்த் அகமது நேற்று முன்தினம் சென்னையில் உள்ள அமலாக்க துறை அலுவலகத்தில் ஆஜரானார்.
அவரிடம், 8:00 மணி நேரம் நடத்திய விசாரணையில், மோசடி செய்தது உறுதியானதை தொடர்ந்து, அமலாக்க துறையினர், நிஷாந்த் அகமதுவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.