தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 11 பேரிடம் ரூ.7.27 லட்சம் 'அபேஸ்'

11 பேரிடம் ரூ.7.27 லட்சம் 'அபேஸ்'

11 பேரிடம் ரூ.7.27 லட்சம் 'அபேஸ்'


ADDED : செப் 20, 2025 06:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 20, 2025 06:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : பெண்கள் உட்பட 11 பேர் மோசடி கும்பலிடம் ரூ. 7.27 லட்சம் ஏமாந்துள்ளனர்.

தர்மபுரியை சேர்ந்த பெண்ணை, வாட்ஸ் ஆப் மற்றும் டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், ஆன்லைனில் பகுதி நேர வேலையாக வர்த்தகத்தில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என, கூறியுள்ளார்.

இதைநம்பி, மர்ம நபர் தெரிவித்த ஆன்லைன் வர்த்தகத்தில் பல்வேறு தவணைகளாக ரூ. 5 லட்சத்து 13 ஆயிரத்து 527 முதலீடு செய்துள்ளார்.

அதன் மூலம் வந்த லாப பணத்தை எடுக்க முயன்றபோது, முடியவில்லை. அதன்பிறகே, மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது.

இதேபோல், புதுச்சேரியை சேர்ந்தவர் 70 ஆயிரம், நெட்டப்பாக்கத்தை சேர்ந்தவர் 9 ஆயிரத்து 800, ரெட்டியார்பாளையத்தை சேர்ந்தவர் 25 ஆயிரம், காலாப்பட்டை சேர்ந்த பெண் 13 ஆயிரத்து 798, லாஸ்பேட்டையை சேர்ந்தவர் 9 ஆயிரத்து 620, வில்லியனுாரை சேர்ந்தவர் 9 ஆயிரத்து 500, அரியூரை சேர்ந்த 2 பேர் 37 ஆயிரத்து 970, 25 ஆயிரம், வாணரப்பேட்டையை சேர்ந்த பெண் 14 ஆயிரத்து 850, பாகூரை சேர்ந்தவர் 23 ஆயிரம் என, 11 பேர் மோசடி கும்பலிடம் 7 லட்சத்து 27 ஆயிரத்து 65 ரூபாய் இழந்துள்ளனர்.

இதுகுறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us