/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
3 பெண்கள் உட்பட 6 பேரிடம் ரூ. 7.50 லட்சம் அபேஸ்
/
3 பெண்கள் உட்பட 6 பேரிடம் ரூ. 7.50 லட்சம் அபேஸ்
ADDED : செப் 01, 2025 06:25 AM
புதுச்சேரி :புதுச்சேரியில் 3 பெண்கள் உட்பட 6 பேர் மோசடி கும்பலிடம் ரூ.7.50 லட்சம் ஏமாந்துள்ளனர்.
கலிதீர்த்தாள்குப்பத்தை சேர்ந்த ஆண் நபரை, பேஸ் புக் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், ஆன்லைனில் பகுதிநேர வேலையாக வர்த்தகத்தில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறியுள்ளார். இதைநம்பி, மர்ம நபர் தெரிவித்த ஆன்லைன் வர்த்தகத்தில் பல்வேறு தவணைகளாக ரூ. 6 லட்சத்து 78 ஆயிரம் முதலீடு செய்துள்ளார்.
பின், அதன் மூலம் வந்த லாபப்பணத்தை எடுக்க முயன்றபோது, முடியவில்லை. அதன்பிறகே, மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது.இதேபோல், பங்கூரைச் சேர்ந்த பெண் 30 ஆயிரத்து 400, நெல்லித்தோப்பை சேர்ந்த பெண் 6 ஆயிரம், முத்தியால்பேட்டையை சேர்ந்த நபர் 30 ஆயிரத்து 752, கோரிமேட்டை சேர்ந்த நபர் 4 ஆயிரம், கணுவாப்பேட்யை சேர்ந்த பெண் ஆயிரத்து 450என 6 பேர் மோசடி கும்பலிடம் 7 லட்சத்து 50 ஆயிரத்து602 ரூபாய் இழந்துள்ளனர்.
இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.