/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் 4 பேரிடம் ரூ. 7.58 லட்சம் 'அபேஸ்'
/
புதுச்சேரியில் 4 பேரிடம் ரூ. 7.58 லட்சம் 'அபேஸ்'
ADDED : மார் 20, 2025 04:46 AM
புதுச்சேரி: காரைக்காலை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரை தொடர்பு கொண்ட நபர் பங்கு சந்தையில், முதலீடு செய்து சம்பாதிக்கலாம் என, பேசினார்.
அதை நம்பி அவர், பல்வேறு தவணைகளில் 6.5 லட்சம் ரூபாயை அனுப்பி ஏமாந்தார்.
அதே போல், காரைக்கால் நெப்போலியன் என்பவரை தொடர்பு கொண்ட மர்ம நபர், பங்கு சந்தையில், முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என கூறினார். அதை நம்பி, அவர் 1.34 லட்சம் ரூபாயை அனுப்பி ஏமாந்தார்.
மேலும், காரைக்கால் ரூபன் 10 ஆயிரம் ரூபாய், அரியாங்குப்பம் பார்த்திபன், 9 ஆயிரம் அனுப்பி ஏமாந்தனர். இதுகுறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.