/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆன்லைன் மூலம் ரூ.8 லட்சம் மோசடி போலீசார் விசாரணை
/
ஆன்லைன் மூலம் ரூ.8 லட்சம் மோசடி போலீசார் விசாரணை
ADDED : பிப் 18, 2025 06:38 AM
புதுச்சேரி: ஆன்லைனில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 பேரிடம், ரூ. 8 லட்சத்தை மோசடி செய்த கும்பலை சைபர் கிரைம் போலீசார் தேடிவருகின்றனர்.
புதுச்சேரி எல்லைப்பிள்ளைசாவடி கிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் சுபி.இவரை, வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், பகுதி நேர வேலையாக, ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால், அதிக பணம் சம்பாதிக்கலாம் என்றார். அதனை நம்பிய சுபி, மர்ம நபர் கூறிய வங்கி கணக்கில் ரூ.5.03 லட்சத்தை முதலீடு செய்தார். அதன் மூலம் கிடைத்த லாப தொகையை எடுக்க முடியாததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.
முதலியார்பேட்டை சிவவிஷ்ணு நகரை சேர்ந்த முகமதுமுபாரக் என்பவர், பேஸ்புக்கில் இணைப்பில் வந்த, ஒரு வெளிநாடு வேலை தொடர்பான விளம்பரத்தை பார்த்து, அதிலிருந்த லிங்கை கிளிக் செய்துள்ளார். இதையடுத்து, வாட்ஸ் ஆப் மூலம் முகமது முபாரக்கை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாகவும், அதற்கான செயலக கட்டணம் மற்றும் விசா கட்டணத்தை செலுத்த கூறினர்.
அதனை நம்பிய முபாரக், ரூ. 1.79 லட்சத்தை, மர்ம நபர்களுக்கு அனுப்பி வைத்து, ஏமாந்துள்ளார். இதேபோல், லாஸ்பேட்டையை சேர்ந்த கனிமொழி, ஆன்லைன் மோசடி கும்பலிடம் சிக்கி, ரூ. 92 ஆயிரத்து 200 செலுத்தி ஏமாந்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

