/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெண்ணிடம் ரூ.8.94 லட்சம் 'அபேஸ்'
/
பெண்ணிடம் ரூ.8.94 லட்சம் 'அபேஸ்'
ADDED : ஜன 22, 2026 05:08 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் 6 பேரிடம் சைபர் மோசடி கும்பல் ரூ.9.27 லட்சம் ஏமாற்றியுள்ளது.
லாஸ்பேட்டையைச் சேர்ந்த பெண்ணை தொடர்பு கொண்ட மர்ம நபர், வங்கி அதிகாரி போல் பேசியுள்ளார். அதில், வங்கி கணக்கின் கே.ஓய்.சி.,யை புதுப்பிக்க ஏ.டி.எம்., கார்டு விவரங்கள் மற்றும் ஓ.டி.பி., எண்ணை கேட்டுள்ளார். இதைநம்பிய அப்பெண் , மர்மநபருக்கு அனைத்து விவரங்களையும் தெரிவித்துள்ளார். அதன்பின் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ. 8 லட்சத்து 94 ஆயிரத்து 588 ரூபாயை மோசடி கும்பல் எடுத்து ஏமாற்றியுள்ளது.
இதேபோல், புதுச்சேரி பாரதி நகரை சேர்ந்தவர் 2 ஆயிரத்து 400, வில்லியனுாரை சேர்ந்தவர் 18 ஆயிரத்து 639, பூமியன்பேட்டையை சேர்ந்தவர் 5 ஆயிரத்து 450, அபிேஷகப்பாக்கத்தை சேர்ந்தவர் 3 ஆயிரத்து 150, வில்லியனுாரை சேர்ந்த பெண் 2 ஆயிரத்து 900 என, 6 பேர் 9 லட்சத்து 27 ஆயிரத்து 127 ரூபாய் இழந்துள்ளனர்.
இதுகுறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

