தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/போலி இ–சலான் மூலம் ரூ.97 ஆயிரம் மோசடி

போலி இ–சலான் மூலம் ரூ.97 ஆயிரம் மோசடி

போலி இ–சலான் மூலம் ரூ.97 ஆயிரம் மோசடி


UPDATED : நவ 24, 2026 06:44 PM

ADDED : நவ 24, 2026 06:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 24, 2026 06:44 PM ADDED : நவ 24, 2026 06:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருபுவனை: மதகடிப்பட்டில் போலி ஆர்.டி.ஓ., இ சலான் அனுப்பி வாலிபரிடம் ரூ.97 ஆயிரம் மோசடி செய்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மதகடிப்பட்டு அடுத்த நல்லுார் பிலிப்ஸ் நகரை சேர்ந்தவர் வீரமுத்து மகன் சந்தோஷ்,22; தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு கடந்த 13ம் தேதி வாட்ஸ் ஆப் மூலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் இருந்து நிலுவையில் உள்ள இ–சலான் தொகையை செலுத்த வேண்டும் என, மெசேஜ் வந்துள்ளது.

அதனை நம்பிய சந்தோஷ் அந்த லிங்கை கிளிக் செய்து, தனது மொபைல் எண்ணை பதிவு செய்தார். தொடர்ந்து வந்த ஓ.டி.பி.,யையும் பதிவு செய்தார். பின் பல்வேறு தவணைகளில் அவரது வங்கி கணக்கில் இருந்து 97 ஆயிரத்து 102 ரூபாயை மர்ம நபர்கள் எடுத்துள்ளனர்.

இது குறித்த புகாரின் பேரில், திருபுவனை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us