/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ. 68 லட்சம் மதிப்பில் வளர்ச்சிப் பணிகள் எதிர்க்கட்சித் தலைவர் சிவா துவக்கி வைப்பு

ADDED : மார் 15, 2024 12:07 AM

புதுச்சேரி: வில்லியனுார் தொகுதியில், ரூ. 68 லட்சம் மதிப்பில் வளர்ச்சிப் பணிகளை, எதிர்க்கட்சித் தலைவர் சிவா துவக்கி வைத்தார்.
வில்லியனூர் தொகுதி, சுல்தான்பேட்டை புதுத் தெருவில், வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து மூலம், ரூ.30.70 லட்சம் மதிப்பிலும், சுல்தான் பேட்டையில் இருந்து அரசூர் சாலை வரை ரூ. 8.86 லட்சம் மதிப்பிலும், கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி துவங்கி உள்ளது.
அதேபோல, வசந்தம் நகர் விரிவாக்கம், வேதபுரீஸ்வரர் நகரில் ரூ. 16.23 லட்சம் மதிப்பில், வாய்க்காலுடன் கூடிய தார்ச்சாலை அமைத்தல் மற்றும் தில்லை நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் ரூ. 12.12 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் மொத்த திட்ட மதிப்பீடு,ரூ. 68 லட்சம். இந்த பணிகளை, நேற்று எதிர்க்கட்சித்தலைவர் சிவா துவக்கி வைத்தார்.இதில், வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன், செயற்பொறியாளர் திருநாவுக்கரசு, இளநிலைப் பொறியாளர் சத்தியநாராயணா, தி.மு.க நிர்வாகிகள்,ஜமாத்தார்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள் , கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.