தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ரூ.6.08 கோடி மதிப்பில் மெத்தாம்பெட்டமைன் பறிமுதல்; 4 பேர் கைது

ரூ.6.08 கோடி மதிப்பில் மெத்தாம்பெட்டமைன் பறிமுதல்; 4 பேர் கைது

ரூ.6.08 கோடி மதிப்பில் மெத்தாம்பெட்டமைன் பறிமுதல்; 4 பேர் கைது


ADDED : செப் 13, 2026 06:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 13, 2026 06:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

 காரைக்கால்: காரைக்காலில், ரூ.6 கோடி மதிப்பிலான மெத்தாம்பெட்டமைன் போதைபொருள் பறிமுதல் செய்யப்பட்டு, 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காரைக்காலில் போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த ‘ஆபரேஷன் தண்டர்ஸ்ட்ரைக்’ துவக்கப்பட்டு போதை பொருள் கடத்தல் கும்பல்களின் நடமாட்டம் கடந்த, 30 நாட்களாக கண்காணிக்குப்பட்டது.

இதில், கிடைத்த தகவலில்பேரில், இன்ஸ்பெக்டர்கள் மரிகிறிஸ்டியன்பால், அறிவுசெல்வம் தலைமையிலான போலீசார் கடந்த 5ம் தேதி சந்தேகத்தின் பேரில் காரைக்கால்மேட்டை சேர்ந்த நிஜந்தன்,28; என்பவரை பிடித்து விசாரித்தனர்.

போலீசாரின் தீவிர விசாரணையில் அவரிடம் இருந்தது, மெத்தாம்பெட்டமைன் போதைபொருள் என தெரிந்தது.

இதையடுத்து போதைபொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் நிஜந்தனை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 1 கிலோ 438 கிராம் மெத்தாம்பெட்டமைன் போதை பொருளை பறிமுதல் செய்தனர்.

தொடர் விசாரணையில், நிஜந்தனின் மைத்துனர் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த ராஜேஷ், காரைக்கால் மேட்டை சேர்ந்த பாக்கியராஜ் மூலம், 30 பொட்டலங்கள் மெத்தாம்பெட்டமைன் போதைபொருளை விற்க திட்டமிட்டிருந்தது தெரிந்தது.

இதையடுத்து அவர்களை பிடித்து விசாரித்த போலீசார் ராஜேஷிடம் இருந்து, 6 கிலோ 137 கிராம் , பாக்கியராஜிடம் இருந்து 30 கிராம் மெத்தாம்பெட்டமைன் இருப்பதும், இவர்கள் இலங்கையை சேர்ந்த அலெக்ஸ் ராபர்ட் ஜெரமி,32: என்பவரிடம் இருந்து வாங்கியதும் தெரியவந்தது. தொடர்ந்து அவர்கள் மூன்று பேரையும் கைது செய்த போலீசார், இந்த வழக்கில் மொத்தமாக ரூ 6.08 கோடி மதிப்புள்ள 7 கிலோ 605 கிராம் மெத்தாம்பெட்டமைன், மூன்று மொபைல் போன்கள் மற்றும் 3 பைக்குகளை பறிமுதல் செய்தனர். 

 போலீசாரின் தீவிர விசாரணையில் மெத்தாம்பெட்டமைன் போதை பொருள் இலங்கை நாட்டில் இருந்து கடத்தி வந்து, பல்வேறு இடங்களில் விற்க திட்டமிட்டது தெரியவந்துள்ளது.

இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்டு காரைக்காலில் விற்பனை செய்ய வைத்திருந்த ரூ.6.08 கோடி மதிப்பிலான மெத்தாம்பெட்டமைன்  போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

10.84 கிலோ கஞ்சா பறிமுதல்: கீழவாஞ்சூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த, 4 பேரை இன்ஸ்பெக்டர் லெனின்பாரதி தலைமையிலான போலீசார் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் சேலம் மாவட்டம் ஆத்துாரை சேர்ந்த சடையன் 32; ஆந்திராவை சேர்ந்த பொல்லம் அப்பல நர்ஷா,35; வீரசாய் கிரண்,30; தேவிபுடி,38; என்பதும், காரைக்கால்மேட்டை சேர்ந்த பாக்கியராஜிடம் ரூ.5 லட்சம் மதிப்புள்ள 10.84 கிலோ எடையுள்ள கஞ்சாவை ஒப்படைக்க சென்றதும், தெரியவந்தது. தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். 

கோட்டுச்சேரி பகுதியில் கடந்த, 8ம் தேதி இன்ஸ்பெக்டர் ராமு தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில், அம்மன்கோவில் பாதையை சேர்ந்த மகேந்திரன்,40; காரைக்கால்மேட்டை சேர்ந்த நர்முகன்,30; மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர், ரூ5.65 மதிப்பிலான 1.3 கிலா அளவுள்ள கஞ்சாவை, 248 பொட்டலங்கலாக பிரித்து விற்பனை செய்ய வைத்திருந்தது தெரியவந்தது.

தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிறப்பாக செயல்பட்ட போலீசாரை சீனியர் எஸ்.பி., வினய்குமார்கட்ஜ் பாராட்டினார்.  

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us