ADDED : செப் 13, 2026 06:21 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: அகரத்தில் சென்டரிங் தொழிலாளி துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வில்லியனுார் அகரம் பகுதியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன், 50; சென்டரிங் தொழிலாளி. குடிப்பழக்கம் உள்ள இவர் அவ்வப்போது குடித்துவிட்டு வருவார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் இரும்பு கேட்டின் உள்புறம் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
